Kadhal

விடை கொடு …

விடை கொடு விடை கொடு உலகே

இந்த வாழ்க்கை வெறுக்கிறது

விரும்பிய உள்ளம் என்னை ஏற்க மறுக்கிறது

பூவாக இருக்கும் என் பாசத்தை நம்ப மறுக்கிறது நான் நம்பிய நீயே என்னை வெறுக்கும் போது

இந்த உயிர் இருந்து மட்டும் பலன் என்ன ஏற்றுக்கொள் இறைவா இந்த பாவப்பட்ட உய்ரை உன் காலடில் நிம்மதியாக உறங்குகிறேன்!!!!!!!!!!

எல்லோர் கையிலும் துப்பாக்கி…

நேற்று இரவின் காலையில்

இந்தியா வல்லரசாகி இருந்தது.

சுவிஸ் வங்கியிலிருந்து

கறுப்பு பணம் திரும்பியிருந்தது!

இருந்தும்

உலக வங்கியிடம்

கடன் கேட்டுக்கொண்டிருந்தது!!

தனிக் குடித்தனங்களில்

விவாகரத்து வழக்குகள்…

காதல் போர்வைக்குள்

காம விளையாட்டுகள்…

அரசியல்வாதிகள்

தனி வங்கி ஆரம்பித்திருந்தார்கள்…

எல்லோர் கையிலும் துப்பாக்கி…

நீதிமன்றம்

மனித இன படுகொலைக்கு மாற்றாக

பறவை, விலங்கு சுட்டதற்கு

மரண தண்டனை விதித்துக் கொண்டிருந்தது…

திரைப்படம், தொலைக்காட்சி

ஆடையை முற்றும் துறந்த

நவீன கலாச்சாரத்தை

போதனை செய்து

‘நாமே குழந்தை

நமக்கேன் குழந்தை’ என்றது.

நான்

கலைந்த ஆடையை

உடுத்திக்கொண்டு எழுந்தேன்.

எப்படி எழுவேன் விருட்சமாக!…

கவிதை எழுத முன்மொழிந்தேன்

வார்த்தைகளாய் உருவெடுத்தாய்

கதை எழுத முனைந்தேன்

உரையாடலை உருவெடுத்தாய்

பாடல் எழுத பரவசப்பட்டேன்

இசையாய் இணைந்து கொண்டாய்

ஓவியம் தீட்ட விரைந்தேன்

வண்ணங்களாய் இசைந்து விட்டாய்

நிலவொளியில் அமர

மின்மினியாய் ரசிக்க செய்தாய்

உறங்க நினைக்க

கனவுகளாய் காட்சியளித்தாய்

உன் கரம் பிடிக்க ஏங்கும் நங்கை நான்

எனும் ஒற்றை வரியில்

வாழ்க்கை துணை விண்ணப்பத்தை

என்னிடம் சமர்ப்பித்தாய்

இத்தனை இதமாய் எனக்குள்

காதல் விதைகளை விதைத்து

கண்மணிக்குள் வந்த கன்னியே

இத்தனை மாற்றம் நிகழ்த்தி

இடையில் ஏமாற்றம் தந்தது ஏனோ…

பிரிவு எனும் நஞ்சால்

கண்ணீரால் கானல் நீராய்

விதைகளை வீணடித்து

போய்விட்டாயே! இனி என் செய்வேன்

எப்படி எழுவேன் விருட்சமாக!…

குப்பைத்தொட்டி

”அலுவலகத்தில்

குப்பைத்தொட்டி.

குப்பை பொறுக்கி

வாழ்பவனுக்கோ

அதுதான் அலுவலகம்”

“காதலிக்க அல்ல

“என் காதலை மறுத்த அவளிடம் இறுதியாக ஒன்று கேட்டேன்”

“உன் இதயத்தை தருவாயா என்று”

“காதலிக்க அல்ல, என் கல்லறையில் ஒரு கல் குறைகிறது என்று”

இது என்ன ஈர்ப்பு?

இது என்ன ஈர்ப்பு?

என்னவள் காந்த கண்களில்.

விழுந்தும் அடிப்படவில்லை

என்னவள் கன்னங்குழியிகளில்.

சுட்டெரிக்கும் சூரியனில் விண் மீன்ன்கள்

என்னவள் வியர்வை துளிகள்.

நறுமணமின்றி உதிர்கிறதே-மலர்கள்?

என்னவள் புன்னகை பூக்கையில்.

கவிதை பேசும் ரோஜாப் பூ

என்னவள் இதழ்களில்.

புதுப்புது இலக்கியம் தோன்றுதே

என்னவள் வெட்கத்தில்.

ஒப்பனையில்லா வென்னிலவோ

என்னவள் பூ முகத்தில்!

கற்பனை கூட செய்ய முடியாது

இந்த பூ உலகத்தில்!

கதிரவன்

உறக்கம் கலைத்தான் கதிரவன்

இரவு விழித்த களைப்பில்

உறங்கச் சென்றது நிலவு

மெல்ல விழிதிறந்தான் கதிரவன்

இளஞ் சூட்டிற்கு இரையானது

புற்களில் உறங்கிய பனித்துளிகள்

இளஞ்சூடு தட்டி எழுப்ப

உறக்க சோம்பலை களைந்து

விருட்டெழுந்தது மரமும் செடிகளும்

கொக்கரகோ கொக்கரக்கோ ….

கதிரவன் எழுந்து வருகிறான்

ஊரை எழுப்பியது சேவல்கோழி

குஞ்சுகளின் அன்றைய உணவிற்காக

கூட்டிலிருந்து இறகை விரித்து

புறப்பட்டது தாய்ப் பறவைகள்

உறங்கும் வீட்டை உணர்த்துகிறது

சன்னல் கதவு இடுக்குகளில்

ஊடுருவி நுழைந்த வெளிச்சம்

நல்லா விடிந்து விட்டது

எண்ண உறக்கம் வேண்டியிருக்கு

பிள்ளைகளை எழுப்பும் அம்மா

காலையிலேயே சுளீர்ன்னு வெயில்

எங்கோ பயணம் போவதற்காக

வீட்டில் இருந்து புறப்படுபவர்

ஈரத்தை களவு கொடுத்து

கொடியில் புன்னகை செய்கிறது

உலர்ந்த உடுதுணிகள்

மார்பில் கொதிக்கும் அனல்

கதிரவன் மேல் கோபம்

வெற்றுப்பாதங்களை சுட்டது மணல்வீதி

நீண்ட தார் சாலையில்

அங்காங்கே தேங்கி நிற்கிற்கும்

கானல் நீர்த் துளிகள்

வறண்டு தொண்டயுமாய்

தண்ணீரின் அடையாளம் தேடி

வீதியில் துவளும் பாதகாணிகள்

இங்கே வந்து அமருங்கள்

மடியில் நிழலை விரித்து

வழிபோக்கர்களை அழைக்கும் மரங்கள்

உழைக்காத மனிதர்களுக்கும்

உடலில் இருந்து உதிர்கிறது

வியர்வைத் துளிகள்

கருணை அற்ற கதிரவன்

மார்பு வெடித்து பரிதபமாய்

நீர் வற்றிய குளம்

சிதறிவிழும் அனல் வேட்கை

நட்டு நடு உச்சியில்

பூமியை முறைத்தபடி கதிரவன்

நீ என்ன செய்தாய்?……….

உறக்கம் கெட்டது

உயிரே உனைக் கண்டதும்……

ஊண் மறந்தேன்

உனது நட்பிற்காக………..

எல்லாம் மறந்தேன்

ஏனென்று தெரியவில்லை……….

நான் மறக்க‌

நீ என்ன செய்தாய்?……….

என் முன்

எல்லாம் நீயானதாலா?…….

உன் உருவத்துடன் வாழ்ந்துவிடுகிறேன்

தொலை பேசியில் அன்பை

தந்தாய்…..உருவம்

இன்றி உணர்வுகளுடன்

வாழ்ந்தேன் ….

…கணணியிலே உந்தன்

நிஜத்தை பார்த்தேன் ..

உணர்வுகளுக்கு உருவம்

கிடைத்தது ……

உணர்வுகளை பிரிந்த

போதே உள்ளம் தீயில்

வெந்த வேதனையை

உணர்ந்ததே ….உந்தன்

உருவத்தை எப்பிடி

நான் பிரிவேன் …

உன்னோடு வாழாத

போதும் உன் உருவத்துடன்

வாழ்ந்துவிடுகிறேன்

கற்பனையில் ஆவது …

 

சூரியனே மறையாதே…

ஒருநாள் காதல்

இரு பூக்களுக்கு இடையில்…!

நானும் அவளும்

மனசால் பேசினோம்…

மலரும் மலரும்

மணத்தால் பேசியது…!

சூரியனே மறையாதே…

சுகமான காதல் தொடரட்டும்…!

உன் கண்கள் மூடியே இரவில் மலர்க்

காதலுக்கு கல்லறை கட்டாதே,,,!

என் கிறுக்கல்கள்

நீ என்னுடன் இருந்தபோது

என் கிறுக்கல்கள் எல்லாம்

கவிதையாக பிரகாசித்தன…….

நீ என்னுடன் இல்லாதபோது

என் கவிதைகள் எல்லாம்

வெறும் கிறுக்கல்களாக கூட

சுவாசிக்கவில்லை……..

குழப்பமான கிறுக்கல் ….

மழைச்சாரலில் வரும் வானவில்போல் புன்னகைத்தாய்

உன் புன்னகை மழையில் நனைந்தது என் இதயம்…

பௌர்ணமி நிலவுபோல் பார்வை வீசினாய்

உன் பார்வை ஒளியில் மின்னியது என் இதயம்…

அருவியின் ஓசைபோல் வார்த்தைகள் உதிர்த்தாய்

உன் வார்த்தையில் வசியமானது என் இதயம்…

கொடை வள்ளல் போல் அன்பை தந்தாய்

உன் அன்பே தானமாய் பெற்றது என் இதயம்…

பூத்துக்குலுங்கும் நந்தவனம் போல் மகிழ்ச்சி தந்தாய்

உன் மகிழ்ச்சி ஒன்றையே சுவசமாக்கியது என் இதயம்…

கோடைகால இலைபோல் திடீரென உதிர்ந்தாய்

உயிர்போன வலியில் துடிக்கிரதடி என் இதயம்…

என் உயிரை எடுத்துக்கொண்டு என்னை விட்டு போனவளே

என் இதயத்தை கிழித்துவிட்டு நிம்மதியாய் சென்றுவிட்டாய்…

உன்னையே உலகம் என நம்பும் நான் உனக்காக சாவதா?

என்னையே உலகம் என நம்பும் என் குடும்பத்துக்காக வாழ்வதா?

என் உதட்டில்…

சத்தமிடாமல்

சாமார்த்தியமாக

உதட்டோடு உதடாக

நீ கொடுத்த அன்பு முத்தம் மட்டும்

காற்றடித்தும் ஈரம் மட்டும் காயவில்லை….

என் உதட்டில்…

“பிரியத்தான்” வேண்டுமென்று…!

எனக்குள் அவள் நட்சத்திரம்

விடிந்தாலும் விழமாட்டேன் என்பாள்

ஒளிவீசிக்கொண்டு…!

எனக்குள் அவள் மேகம்

கலையும் முன் தருவேன் என்பாள்

கண்களிலே ஈரமதை…!

எனக்குள் அவள் வானம்

தெரிந்தாலும் தொலைவிலே என்பாள்

என் இதயத்திலிருந்து…!

எனக்குள் அவள் நாதம்

உறக்கதிலும் ஒலிப்பேன் என்பாள்

மாறாத நினைவுகளை…!

எனக்குள் அவள் குழந்தை

பிடிவாதம் கொள்வேன் என்பாள்

“பிரியத்தான்” வேண்டுமென்று…!

உன் இதயம்…….

நீ முத்தமிடுகையில்

தெரிந்து கொண்டேன்……

உன் உதட்டைவிட

உன் இதயம்

மென்மையானது என்று…..

பார்வை…….

சூரிய உதயத்திற்கு முன்

பனித்துளிகள் கரைந்தன…..

என்னவள் பார்வை பட்டதால்….

காதல் காதல் காதல்

எனக்கும் காதல் வந்தது,

என் கனவை கலைத்து,

என் உலகத்தை மறக்க செய்து,

உன் பின்னாலே சுற்றி திரிய,

என்னுள்ளும் காதல் வந்தது,

பூவெல்லாம் ரசிப்பதும்,

பாட்டெல்லாம் படிப்பதும்,

எனக்குள்ள நான் துளைவதும்,

துளைத்த என்னை,

உன்னில் வந்து தேடுவதும்,

என என்னுள்ளும் காதல் வந்தது,

கோவமாய் நீ பார்ப்பதும்,

அதில் என் பிடிவாதம் தவடுபோடியாவதும்,

புன்னகையாய் நீ பேசுவதும்,

அதில் நான் துளைந்தே போவதும்,

என என்னுள்ளும் வந்தது…

இன்றும் – காதலோடுதான்

• நீ

என்னை

நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல

இறைவனிடத்திலிருந்தும்

தனிமைப்படுத்திவிட்டாய்

• நீ

விருந்தாளியாக வந்தாய்

போய்விட்டாய்

உறவுமுறையாக

காதல் மட்டுமே இருக்கிறது

• நான் இருள்

நீ விளக்கு

• நான் உறவு

நீ பணம்

பணத்திற்கு

உறவுத் தேவையில்லை

உறவுமுறைக்குப்

பணம் முக்கியமில்லை

• துன்பம் வந்தால்

சிரிப்பேன்!

எதிரே வருகிறாய்

சிரிக்கிறேன்!

நினைத்துக்கொள்வாய்:

தோல்வியை மறந்து

மகிழ்ச்சியாக இருக்கிறானென்று.

• நான் கை குலுக்கி

வாழ்த்து சொன்னபோது

களங்கப்பட்டுப்போய்

இருக்குமோ?

நம் காதல்.

• நண்பர்களாக

இருப்போம் என்கிறாய்!

என்னால்

முடியவில்லை.

இன்றும் –

காதலோடுதான்

பேசிப் பழகுகிறேன்.

உணர்வு…

முறிந்து போக இது விறகல்ல.

நட்பு என்னும் வலிமையான உறவு..

உதிர்ந்து போக இது மலரல்ல.

உதிரத்தில் கலந்திருக்கும் ஓர் உணர்வு..

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s